கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Monday, May 22, 2006

கமலஹாசன் - இளையராஜா

நம்ம ப்ளாக் நண்பர் சாணக்கியன் (சாய்) கமல் பாடிய பாடல்கள் வச்சி ஒரு பதிவு போடுங்கன்னு கேட்டுக்கிட்டார். நேயர் விருப்பமா பாடல் போட்டு, இப்போ பதிவு போட ஆரம்பிச்சாச்சு.

கமலை பற்றி நம்ம எஸ்.பி.பி சுந்தர் அடிக்கடி அழகா, சில சமயம் கோவமா அவர் பதிவில் சொல்லிக்கிட்டே இருப்பார். இரண்டு படம் ஓடியதும் ஏதோ தமிழகமே தன் பின்னால் இருப்பது போல கேமராவை பார்த்து பேசிக்கொண்டு, துதி பாடல் வைத்துக்கொண்டு நாற்காலி கனவு கண்டு கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில், ஒரு நடிகனாக நடிப்பில் ஏதாவது வித்தியாசமா செய்யணும் என்று துடிப்போடு இருக்கும் மிக சில நடிகர்களில் கமலுக்கு எப்பவுமே முதலிடம் உண்டு. நானும் ஒரு கமல் ரசிகன் தான்.


ஹேராம் பாடல் ஒலிப்பதிவை படம் வெளியாகும் போது அடிக்கடி காட்டுவார்கள். 'ரெண்டு குத்து பாட்டு, ஒரு துதி பாட்டு, ரெண்டு டூயட்' என்று மெனு கார்டை இசை அமைப்பாளர்களிடம் கொடுத்து விட்டு, ஹிட் ஆனா போதும் என்னும் இன்றைய நிலையில், இசையில் கூட கமல் ராஜாவிடம் உட்கார்ந்து கேட்டு ரசித்து பாடல் வாங்குவது போல சில க்ளிப் (ஹேராம்) பார்க்கும் போது இசையில் கமலின் ஈடுபாடு தெரியும். எங்கே வித்தியாசமான முயற்சிகள் இருக்கிறதோ, அங்கே சில தோல்விகளும் சகஜம் தான். கமல் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கும் பாடலுக்கும் கொடுத்த பில்ட்-அப் அப்படி தான் ஆனது. 'மும்பை எக்ஸ்பிரஸ்' பாடல்களை முதலில் கேட்கும் போது, இசை ஓட்டம் பிடி படாமல் ('ஏலே நீ எட்டிப்போ') எனக்கு தலைசுற்றியது உண்மை தான். JAZZ இசையாம், அது இப்படி தான் ஒரு கட்டமைப்பு இல்லாமல் ஓடுமாம். பொதுஜனத்திற்கு எந்த பாடலையும் கேட்டவுடன் ஒரு அழகான ஓட்டத்துடன் இருந்தால் தான் மனதில் ஒட்டும். அந்த வகையில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' பாடல்களும் சரி, படமும் சரி பத்தோடு ஒன்றாக போய்விட்டது. அதிலும் டக்கென்று பிடிக்கும் 'பூ பூத்தது' பாடலை படத்தில் கொத்து பரோட்டாவில் மாட்டின முட்டை மாதிரி கொத்தி இருப்பார் கமல். கொடுமையடா சாமி! உண்மையில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' இசையில் ராஜா இசையில் இன்னொரு சிகரம் தொட்டிருப்பார். அதற்கு கமலும் ஒரு காரணம். ஆனால் எல்லாம் வேஸ்டா போச்சு. இப்படி கமலின் முயற்சிகளை 100 பதிவு போட்டு எழுதிகிட்டே இருக்கலாம்.

இப்போதைய நடிகர்களில் நன்றாக பாடக்கூடிய ஒரே நடிகரும் கமல் தான் ( விஜயும் ஓ.கே. அதுக்காக 'இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்' என்று எல்லா எஸ்.ஏ.சி படத்தில் எல்லாம் டைட்டில் போடுவது கொஞ்சம் ஓவர் :-)). பார்த்தா, பாடாத நடிகர்களே இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் கேசட்டில் பாடகர் பட்டியலில் தன் பெயரை பார்க்க ஆசை தான். பாடுவார்களா, படிப்பார்களா என்பது கேட்பவருக்கே வெளிச்சம். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால் வெறுமனே எளிதான பாடல்களாக பாடாமல், கிட்டத்தட்ட ஒரு professional பாடகர் அளவுக்கு நிறைய பண்ணியிருப்பார். டூயட் (நினைவோ ஒரு பறவை), தனி பாடல் (பொன் மானை தேடுதே), சோகம் (தென்பாண்டி சீமையிலெ, மாடவிளக்கே), ஹை பிட்ச் (விக்ரம், போட்டு வைத்த காதல் திட்டம்) என்று நிறைய வித்தியாசமான பாடல்களை முயற்சி செய்திருப்பார். அவற்றில் சில இந்த பதிவில் பார்க்கலாம்.

கமல் பாடல் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இருந்து 'நினைவோ ஒரு பறவை'. அருமையான ஒரு டூயட் பாடல். இன்னொரு பாடலும் உடனே நினைவுக்கு வருகிறது. 'ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தால்'. இது கமல் தானே? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். மெல்லிசை மன்னர் இசையா? என்ன படம்?



அடுத்து, 'அவள் அப்படித்தான்' படத்தில் இருந்து 'பன்னீர் புஷ்பங்களே'. இளம் கமலின் குரல். இந்த பாடலை கேட்கும் போது கமலை பேசாமல் நடிகர் பட்டியலில் இருந்து பாடகர் பட்டியலில் சேர்த்து விடலாம் என்று தோன்றும். ஏனோ இந்த பாடலில் எனக்கு கமலின் குரல் ரொம்ப பிடிக்கும்.



'ஓ! மானே மானே' மோகன்-ஊர்வசி நடித்த படம் ( டி.வியில் அடிக்கடி 'ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது' பாடல் பார்க்கலாம்). ஆனால் அதில் கமல் பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இது கமல் மோகனுக்கு பாடியதா? இல்லை கமலும் அந்த படத்தில் நடித்திருக்கிறாரா? தெரிந்தவர்கள் கூறுங்கள். ராஜாவின் இசையில் 'ஓ! மானே மானே' படத்தில் இருந்து 'பொன் மானை தேடுதே'.



சத்யா படத்தில் இருந்து ஒரு வித்தியாசமான பாடல். 'போட்டா படியுது படியுது'. எல்லா பாடகர்களாலும் இந்த பாடலை பாடமுடியாது. கமலின் குரல் இயற்கையாகவே இந்த மாதிரி பாடல்களுக்கு பொருந்தி வரும். ( சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் 'புதுப்பேட்டை'ல இந்த மாதிரி ஒரு பாடல் கமல் பாடி இருக்கிறார்). ராஜாவின் கலக்கல் இசைக்காகவும் கமலின் குரலுக்காகவும் இந்த பாடல் எனக்கு புடிக்கும். உங்களுக்கு?



2000-க்கு அப்புறம் ராஜா இசையில் நான் ரசித்து வந்த சில விசயங்கள் குறைந்து போனது போல எனக்கு தோன்றும். எல்லாம் பீட்டும், கணிணி இசையுமா போனதின் தாக்கம் ராஜாவின் இசையிலும் கொஞ்சம் வர ஆரம்பித்தது. அழகாக ஒரு குரூப் வயலின் வந்து, அப்படியே ஒரு கோரஸ் சேர்த்து, Manual ட்ரம்ஸ் 'தும் தும்' என்று ஒரு உற்சாம் கொடுத்து..இப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் ரசிக்க 1000 விசயங்கள் இருக்கும். அது 2000 க்கு அப்புறம் கொஞ்சம் மிஸ்ஸிங்.ம்ம்ம்ம்..நமக்கு வயசாகி போச்சு. இளவட்டங்கள் எப்படி விருப்புதோ அப்படி தானே (Current Trend) கொடுக்கமுடியும். தபேலா இசையை கேட்டாலே பத்திரிகைகளில் '80ஸ் மாதிரி இருக்கு. பழைய பாட்டு மாதிரி இருக்கு' என்று முத்திரை குத்தப் பட்ட ராஜாவின் இசை ஏராளம். இசை கருவிகளுக்கும் காலகட்டம் கொடுத்த நம்ம அறிவாளிங்கள என்ன சொல்ல. அப்போது தான் 'விருமாண்டி' வந்தது. அந்த படத்தில் ராஜா எவ்வளவு fresh-a வந்தார். அடடா! கமலுக்கு தான் அதில் பாதி பெருமை சேர வேண்டும். எல்லா பாடல்களையும் கமல் பாடினாலும், கேட்க ரொம்பவே நன்றாக இருந்தது. அதில் 'ஒன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது' பாடலை படத்தில் பார்க்கும் போது, அந்த இருட்டும், நிலா வெளிச்சமும் அதை இசையில் ராஜா கொண்டு வரும் போது நாமே ஏதோ நிலவொளியில் இருப்பது போல தோன்றும். ஸ்ரேயா கோஷல் தன்னுடைய Limited உச்சரிப்பில் அழகாவே பாடி இருப்பார்.




கடைசியா, வித்யாசாகர் இசையில் 'அன்பே சிவம்' பாடல். தலைப்பு பாடல். 'அன்பே சிவம்' படத்தை பற்றி நம்ம தமிழ்மணத்தில் ஒரு 50 பதிவு வந்திருக்கும். வித்யாசாகர், அர்ஜுன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் போதில் இருந்தே எனக்கு பிடிக்கும். இந்த பாடலை கேட்ட சாணக்கியனிடமே பின்னூட்டத்தில் ஏதாவது சொல்வார் என்று விட்டுவிட்டு பாடலை போடுகிறேன்.


45 Comments:

At 7:59 PM, Blogger Unknown said...

kadaise Paadal Miga Arrumayanthu Siva.....Ungal perrum Sivam_thaan :-)

Anbe Sivam.....

Anbudan,
Natarajan

 
At 8:25 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//கொத்து பரோட்டாவில் மாட்டின முட்டை மாதிரி கொத்தி இருப்பார் கமல்.//

என்ன சிவா, நம்ம ஏரியாக்குள்ள புகுந்து பொறப்புடற மாதிரி தெரியுது :D

கொஞ்சம் கேலி பாடல்கள் எல்லாம் விட்டுட்டா மாதிரி தெரியுது. அப்புறம் மாருகோ மாருகோ, சுந்தரி நீயும் போன்ற கர்னாடிக் இசைப் பாடல்கள்.... சொல்லிக்கிட்டே போகலாம்....

 
At 8:54 PM, Blogger G.Ragavan said...

திரைப்பட நடிகர்களில் நல்ல இசை ரசனை உடையவர்களில் கமலும் ஒருவர். விஜயைப் பாடகர் கணக்கில் சேர்த்தது என்னைப் பொருத்த வரையில் குற்றம். ஆனால் அவருடைய அம்மா நன்றாகப் பாடுவார்கள். மெல்லிசை மன்னர் இசையிலும் இசைஞானியின் இசையிலும் பாடியிருக்கிறார்கள். நிலவே மலரே படத்தில் ஒரு பாட்டு. சரியாக நினைவில்லை.

கமலுக்கு வருவோம். கமல் முதலில் பாடிய ஞாயிறு ஒளி மழையில் பாடல் தேவராஜன் மாஸ்டர் இசையில் அந்தரங்கம் என்ற படத்தில் வந்தது. மிகவும் அருமையான பாடல். மெல்லிசை மன்னர் இசையிலும் கமல் பாடியிருக்கிறார். "தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும். தள்ளாடி நடந்தா...ஓ பார்வதி ஓ தேவதாஸ்" கமல் ஸ்ரீபிரியா நடிச்ச சவால்-னு நினைக்கிறேன்.

 
At 8:56 PM, Blogger G.Ragavan said...

ஓ மானே மானே-ங்குற படம் இந்தியில வெளிவந்த ஜூலிங்குற படத்தோட தமிழாக்கம். ஆனா சரியாவேயில்லை. படம் டுபுக். மொதல்ல அது மலையாளத்துல சட்டக்காரிங்குற பேர்ல வந்தது. அப்புறம் அதே இயக்குனர் சேதுமாதவன் இந்தியில ஜூலின்னு எடுத்தாரு. சூப்பர் ஹிட் படம்.

அதுல கமல் நடிக்கலை. அந்தப் பாட்டு மோகனுக்காகப் பாடியது.

விருமாண்டி படத்துல பாட்டுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மீண்டும் ஜே.கே.பி மாதிரி மீண்டும் இளையராஜான்னு சொல்ற மாதிரி படம்.

அதுல எல்லாப் பாட்டும் நல்லாயிருக்கும்னாலும் மாடவிளக்கேன்னு கமல் பாடுற பாட்டு...ரொம்பவே உருக்கம்.

 
At 1:27 AM, Blogger சாணக்கியன் said...

சிவா,

எனக்காக ஒரு பதிவு போட்டதற்கு நன்றி. பாடல்கள் அத்தனையும் அருமை. 2 பாடல்கள் நான் இதுவரை கேட்டதில்லை. ஒவ்வொரு பாட்டிலும் கமலின் குரல் வெவ்வேறு விதமாக ஒலிக்கின்றது. 'பன்னீர் புஷ்பங்களே' பாடலை முதன்முதலில் கேட்டபோதுதான் கமல் ஒரு தேர்ந்த பாடகர் என்பதை புரிந்துகொண்டேன். பின்னர் விசாரித்ததில் அவர் முறைப்படி இசை படித்திருக்கிறார் என தெரிந்தது. விருமாண்டி படத்திற்காக ஜல்லிக்கட்டு பயின்றது, தேவர் மகனுக்காக சிலம்பம் கற்றது என அவருடைய ஆர்வம் மற்றும் தொழிலுக்கான அர்ப்பணிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் கமல் 'சகலகலா வல்லவன்'தான்.

//இந்த பாடலை கேட்ட சாணக்கியனிடமே பின்னூட்டத்தில் ஏதாவது சொல்வார் என்று விட்டுவிட்டு பாடலை போடுகிறேன்//

என்ன சிவா, இவ்வளவு பெரிய பொறுப்பை என்கிட்ட கொடுத்திட்டீங்க. உங்கள மாதிரி எழுத முடியுமா? சரி டிரை பன்றேன்.

வழக்கத்தை விட வித்யாசாகரின் இசை சற்று கூடுதல் சிறப்பாகவே இப்படத்தில் உள்ளது. இதுவும் கமலின் வேலை வாங்கும் திறனோ? அல்லது நல்ல கூட்டணி அமையும் போது வரும் எக்ஸெலன்ஸி?

'மனதின் நீளம் எதுவோ அதுவோ வாழ்வின் நீளமடாஆஆஆ' என உச்சதிதிற்கு செல்வது போல் இருக்கும். சிவாஜி ஒவர் ஏக்டிங் என்று தோன்றுவது போல கமல் ஓவர் சிங்கிங் செய்வதுபோல இது போன்ற பாடல்களில் தோன்றும். 'கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்' போன்ற பாடல்களில் வார்த்தைகளுக்கு அதீத அழுத்தம் கொடுத்து கத்துவதற்கு சற்று கீழே பாடியிருப்பார். ஆனால், 'யார் யார் சிவம்' பாடல் அதுபோல இல்லாமல் சற்று அடக்கியே வாசிக்கப் பட்டிருப்பதால் பாடலின் இனிமை மாறாது இருக்கும். இசைக் கருவிகளும் சிறப்பாக கையாளப் பட்டிருக்கின்றன. வழக்கமான என்டெர்டெயின்மென்ட் பாணியில் இல்லாமல் பாடல்கள் படத்திற்கு உயிரோட்டம் அளிக்குமாறு (ராஜா இசையில்தான் பாடல்கள் அப்படி இருக்கும்) அமைத்திருப்பதற்கு வித்யாசாகருக்கு ஒரு ஷொட்டு!

 
At 3:47 AM, Blogger சிவா said...

நடா! முதல் வருகையே உங்களது தான். இப்போ அடிக்கடி தமிழ்மணம் பக்கம் வர்ற மாதிரி தெரியுது :-). நல்லது.

'அன்பே சிவம்' பாடல் உங்களுக்கு புடிக்காம இருக்குமா :-).

 
At 3:49 AM, Blogger சிவா said...

கொத்தனாரே! கொத்து பரோட்டா பற்றி பேச உங்க கிட்ட உரிமம் வாங்கணும் போலையே :-)) இனி மறக்காம வாங்கிடறேன்.

சுந்தரி நீயும் நல்ல பாடல். முழுவதுமே அந்த பாடல் மலையாளமாம். கேட்டால் அப்படி தெரியாது.

'மாருகோ மாருகோ'வும் கமல் பாடல் தான். பாடியது எஸ்.பி.பி. இன்னும் நிறைய பாடல்களை சொல்லிக்கிட்டே போகலாம். அவ்வளவா கேட்காத பாடல்களை போட்டேன். இந்த பக்கம் வந்ததுக்கு நன்றி.

 
At 3:59 AM, Blogger சிவா said...

வாங்க ராகவன்! விஜய் அம்மா நல்லா பாடுவாங்க. அவரு மாமா தானே பாடகர் எஸ்.என்.சுரேந்தர். விஜய் குரல் கிட்டத்தட்ட அவர் மாமா குரல் மாதிரி தான் இருக்கும்.

ஞாயிறு ஒளி மழையில் பாடல் அந்தரங்கம் படத்தில் இருந்தா. இசை அமைப்பாளர் வரைக்கும் அழகாக தகவல்களை எடுத்து விடறீங்க. நன்றி ராகவன். 'தண்ணிய போட்டா' பாடல் நினைவிருக்கிறது. சவால் என்று தான் நானும் நினைக்கிறேன்.

ஜூலி படமா 'ஓ! மானே மானே'. ஹிந்தில நம்ம ஊரு லட்சுமிக்காக பெயர் பெற்ற படம் தானே 'ஜூலி'?
'ஓ! மானே மானே' ஏதோ டப்பிங் படம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கமல் மோகனுக்காக பாடியதா. அப்படியா. நல்லா இருக்கே.

//மீண்டும் இளையராஜான்னு சொல்ற மாதிரி படம்.// ஆமாம். ஆனா மறுபடி அந்த ராஜா காணாம போய்ட்டார். கமல் ஏதாவது படம் எடுத்தால் தான் உண்டு. :-(

//மாடவிளக்கேன்னு கமல் பாடுற பாட்டு...ரொம்பவே உருக்கம். // எனக்கும் ரொம்ப பிடிக்கும். பாடலின் வரிகள், கமல் பாடும் விதம், கமல் படமாக்கிய விதம் எல்லாமே நன்றாக இருக்கும்.

 
At 4:04 AM, Blogger தேசாந்திரி said...

சிவா வழக்கம் போல் பாடல் தேர்வு மிக அருமை. நன்றி. பாடல் கேட்ட நண்பன் சாணக்கியனுக்கும் நன்றி.

 
At 4:08 AM, Blogger சிவா said...

வாங்க சாணக்கியன்! ரெண்டு பாடல்கள் இது வரை கேட்டதில்லையா. 'பொன் மானை தேடுதே' கேட்டதில்லையா. ஆமாம். அவ்வளவாக பிரபலம் ஆகாத படம்.
கமல் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டவரா. தகவலுக்கு நன்றி. சலங்கை ஒலியில் எவ்வளவு அழகாக ஆடுவார். அந்த ஈடுபாடு யாருக்காவது வருமா?
//நிஜத்திலும் கமல் 'சகலகலா வல்லவன்'தான்.// ஆமாம்.

//என்ன சிவா, இவ்வளவு பெரிய பொறுப்பை என்கிட்ட கொடுத்திட்டீங்க. // பின்ன. உங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கணும் இல்லையா :-))

//வழக்கத்தை விட வித்யாசாகரின் இசை சற்று கூடுதல் சிறப்பாகவே இப்படத்தில் உள்ளது.// நல்ல கதை என்று வரும் போது எல்லா இசை அமைப்பாளர்களிடமும் கூடுதல் முயற்சி தானாகவே அமைந்து விடுகிறது. கமலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

//சிவாஜி ஒவர் ஏக்டிங் என்று தோன்றுவது போல கமல் ஓவர் சிங்கிங் செய்வதுபோல இது போன்ற பாடல்களில் தோன்றும்.// :-)).

//வழக்கமான என்டெர்டெயின்மென்ட் பாணியில் இல்லாமல் பாடல்கள் படத்திற்கு உயிரோட்டம் அளிக்குமாறு (ராஜா இசையில்தான் பாடல்கள் அப்படி இருக்கும்) அமைத்திருப்பதற்கு வித்யாசாகருக்கு ஒரு ஷொட்டு!// உண்மை தான். இந்த மாதிரி பாடல்களுக்கு இசை அமைப்பது தான் கடினம் என்று நினைக்கிறேன். வித்யாசாகர் நன்றாகவே செய்திருப்பார்.

அன்பே சிவம் பாடல் பற்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பேசாம முழு பதிவையும் உங்க கைல கொடுத்திருக்கலாம் போல :-)

 
At 4:08 AM, Blogger பிரதீப் said...

அருமையான பாடல்கள்.

இந்த லிஸ்ட்டுல நான் ரொம்ப நாள் கழிச்சுக் கேட்டது "பொன் மானைத் தேடுதே"!

ரொம்பப் புடிச்ச பாட்டு "பன்னீர் புஷ்பங்களே". அடுத்து "உன்னை விட". ஆனாலும் நீங்க இங்க "சுந்தரி நீயும்", "போட்டு வைத்த காதல் திட்டம்" இதெல்லாம் விட்டுட்டீங்களே...

சும்மா சொல்லப்படாது, படம் வந்த புதுசுல நான் பல ராத்திரி உன்னை விட கேட்காம தூங்கினதில்லை. சுந்தரி நீயும் பாட்டுல அந்த மலையாள உச்சரிப்பு பல டிராக்குல வர வயலின், கிட்டார், டிரம்ஸோட ஜம்முனு கமல் ஜானகி குரல் இழைந்து வரும்.

 
At 4:13 AM, Blogger பிரதீப் said...

சொல்ல மறந்துட்டேன்...

இந்த வரிகளைப் பாருங்க..

"அல்லிக் கொடியக் காத்து அசக்குது
அசையுங் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சுப் பாவம் என்னைப் போலவே அலைபாயுது
......
யாரு சொல்லித் தந்து வந்தது
காணாக் கனா வந்து கொல்லுது
இதுக்குப் பேருதான் மோட்சமா?
........
காட்டுவழி காளைங்க கழுத்து மணி
கேக்கையில் நமக்கது கோயில் மணி
ராத்திரியில் புல்வெளை நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கது மூடுதுணி
"

- இந்தக் கவிஞர் யாரு தெரியுமா? கமலேதான். பாட்டு "உன்னை விட"

நிசமாவே கலைஞந்தானய்யா!

 
At 4:19 AM, Blogger சிவா said...

பாராட்டுக்கு நன்றி தேசாந்திரி.

 
At 4:23 AM, Blogger சிவா said...

பிரதீப்! தொடர் வருகைக்கு நன்றிங்க.

//ஆனாலும் நீங்க இங்க "சுந்தரி நீயும்", "போட்டு வைத்த காதல் திட்டம்" இதெல்லாம் விட்டுட்டீங்களே...// போட்டு வைத்த காதல் திட்டம் பாடலை கமல் ரொம்ப கஷ்டப்பட்டு ஹை பிட்சில் பாடியதாக கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு பதிவில் ஐந்து பாடலோடு நிறுத்திக்கொள்ள வேண்டிய இருக்கிறது (இல்லன்னா ரொம்ப நீளப்பதிவா போய்டும்). அதனால நினைக்கிற எல்லா பாடலும் போட முடியாம போய்டறது பிரதீப். என்ன பண்ண :-(

// படம் வந்த புதுசுல நான் பல ராத்திரி உன்னை விட கேட்காம தூங்கினதில்லை.// எனக்கும் பாடல் வெளிவந்த புதிதில் விருமாண்டி விடாம கேட்டாச்சு. அப்படி ஒரு படம் இனி வருமா..ராஜா கொடுப்பாரா..ம்ம்ம்ம்...பார்க்கலாம்.

/சுந்தரி நீயும் பாட்டுல அந்த மலையாள உச்சரிப்பு பல டிராக்குல வர வயலின், கிட்டார், டிரம்ஸோட ஜம்முனு கமல் ஜானகி குரல் இழைந்து வரும். // சரியா சொன்னீங்க. ஆமாம். இந்த பாடல் முழுவதுமே மலையாளமாமே..நிஜமா..கேட்டுப் பாருங்க.

 
At 4:25 AM, Blogger சிவா said...

//இந்தக் கவிஞர் யாரு தெரியுமா? கமலேதான். பாட்டு "உன்னை விட"// கமலா. நெசம் தானா. அடடா..என்ன அருமையா எழுதி இருக்கிறார். அதை பாடின ஸ்ரேயாவும் நன்றாகவே உணர்வுகளை கொண்டு வந்திருப்பார்.

 
At 4:28 AM, Blogger முத்துகுமரன் said...

//கமல் ஏதாவது படம் எடுத்தால் தான் உண்டு. :-(//

ஆமா ராஜ்கமல் தயாரிப்பா இருந்து கமல் இயக்கமா இருந்தா நிச்சயம் அருமையான இளையராஜவை எதிர்பார்க்கலாம். கமல் முறைப்படி சங்கீதம் கற்றுகொண்டவர். அவருக்கு கற்றுக் கொடுத்தவர் திரு.பாலமுரளிகிருஷ்ணா....

 
At 4:35 AM, Blogger சிவா said...

வாங்க முத்துகுமரன்!

//ஆமா ராஜ்கமல் தயாரிப்பா இருந்து கமல் இயக்கமா இருந்தா நிச்சயம் அருமையான இளையராஜவை எதிர்பார்க்கலாம்// உண்மை தான். அப்படி ஒரு நல்லது நடந்தால், மீண்டும் ஒரு 'விருமாண்டி' இளையராஜாவை பார்க்கலாம்..

// கமல் முறைப்படி சங்கீதம் கற்றுகொண்டவர். அவருக்கு கற்றுக் கொடுத்தவர் திரு.பாலமுரளிகிருஷ்ணா.// எல்லோருக்கும் நிறைய தெரிந்திருக்கிறது. இந்த பதிவின் மூலம் நானும் நிறைய தெரிந்து கொண்டேன். சங்கீதம், நடனம் என்று அவரது ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது.

 
At 4:52 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

//'மாருகோ மாருகோ'வும் கமல் பாடல் தான். பாடியது எஸ்.பி.பி.//

நான் சொல்லறது சதி லீலாவதி படத்தில் வரும் பாட்டு. பாடினது கமலேதான்.

 
At 5:45 AM, Anonymous Anonymous said...

அழகான பதிவு நண்பரே,
இன்னொரு முக்கியமான விஷயம். தான் சார்ந்துள்ள துறையின் வளர்ச்சியில் கமலின் பங்கு முக்கியமானது. அதாவது தனக்குப் பிறகு அந்தத்துறையில் புதிய முயற்சிகள் தோன்றவேண்டும், அதற்கு திரைப்படப் பயிற்சி எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சக கலைஞர்களுடன் உட்கார்ந்து, அவற்றை அமல்படுத்தவேண்டும் என்று முயல்பவர் கமல். அத்தோடு தனக்கென்று பலமான சொத்து எதையும் சேர்க்காதவர்.

 
At 6:01 AM, Blogger கைப்புள்ள said...

என்ன சிவாண்ணே! நல்லாருக்கீங்களா? நம்ம பேவரிட் காம்பினேஷன் ஆச்சே நீங்க சொல்றது...இந்த ஜோடியின் உருவாக்கத்தில் சமீப காலத்துல நான் மிகவும் ரசிச்ச பாட்டு விருமாண்டி படத்துல வர்ற "மாட விளக்கே யாரு ஒன்னை"...எல்லாருக்கும் "ஒன்ன விட" ரொம்ப புடிக்கும்...ஏனோ எனக்கு இந்த பாட்டு தான் ரொம்ப புடிக்கும்.

 
At 7:04 AM, Blogger சாணக்கியன் said...

என்ன சிவா, வரவேற்பையும் அவங்க கொடுக்கிற விட்டுப்போன பாடல்கள் பட்டியலையும் பார்க்கும்போது பாகம்-2 போடனும் போல இருக்கே? :-)

 
At 10:51 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

சிவா, நீங்க போடற பாட்டெல்லாம் எனக்கு கேட்க முடியலைங்க.. ஏதோ பிரச்சனை.. என்னான்னு கண்டு பிடிக்கணும், வீட்லயும் முடியலை, அலுவலகத்திலும் தரவிறக்க முடியலை..

சாணக்கியன் சொன்னதால வந்து பார்த்தேன்.. பாட்டு கேட்க முடியாட்டாலும் உங்க விளக்கம் அருமை.. நீங்க போட்டிருக்கும் பாடல்களில் "உன்ன விட" பாட்டும், "அன்பே சிவம்" பாட்டும் தான் இதுவரை கேட்டிருக்கேன். ரெண்டுமே நல்ல பாட்டு, "உன்ன விட" எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. பிரதீப் சொன்ன வரிகள் பாடலில் வரும்போது ரொம்ப இதமா, இனிமையா இருப்பது இன்னும் பிடிக்கும் :)

அப்புறம், கமலோட லேட்டஸ்ட் பாட்டையும் என் விருப்ப இசையமைப்பாளர் யுவன் பேரையும் சொல்லாம விட்டுடுவீங்களோன்னு பார்த்தேன்.. புதுப்பேட்டை பாட்டு கிடைச்சாலும் போடுங்க. அதுவும் கமலோட க்ளாசிக் லிஸ்ட்ல சேர வேண்டிய பாட்டு.. குரலை எல்லாம் மாத்தி, நல்லா பாடி இருப்பாரு. படம் வந்தா பாக்கணும், எப்படி எடுத்திருக்காங்கன்னு..

 
At 10:59 AM, Blogger சிவா said...

வாங்க பொன்ஸ். நண்பர் சாணக்கியன் தான் பதிவுக்கு ஐடியா எல்லாம் கொடுத்து, பாடல் பட்டியல் சிலவும் கொடுத்தார். அப்படியே நம்ம ப்ளாக்கில் சேர்த்தாச்சு :-).

உங்க கணிணில ரியல் ப்ளேயர் இருக்கா என்று பாருங்க. இல்லன்னா இலவசமா இனையத்தில் கிடைக்கும். இறக்கி கொள்ளுங்கள். ரியல் ப்ளேயர் இருந்தால் தான் பாடல் வேலை செய்யும். Make sure you open the page in Internet Explorer (IE) and not in other browsers. முயற்சி செய்து பார்த்து சொல்லுங்கள்.

யுவனின் லேட்டஸ்ட் கமல் பாடலை விட முடியுமா..அதை பற்றி பிறகு சொல்கிறேன்.

அன்புடன்,
சிவா

 
At 3:26 PM, Blogger சிவா said...

கொத்தனாரே! நீங்க சதிலீலாவதி 'மாருகோ மாருமோ'வ சொல்றீங்களா. அது ஒரு ஜாலியான பாடல். நான் வெற்றிவிழா பாடலை சொல்றீங்களோ என்று நினைத்து விட்டேன் :-))

 
At 3:29 PM, Blogger சிவா said...

வாங்க பாண்டியன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.
//தனக்குப் பிறகு அந்தத்துறையில் புதிய முயற்சிகள் தோன்றவேண்டும், அதற்கு திரைப்படப் பயிற்சி எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சக கலைஞர்களுடன் உட்கார்ந்து, அவற்றை அமல்படுத்தவேண்டும் என்று முயல்பவர் கமல்// மிக சரியாக சொன்னீர்கள். விருமாண்டி படம் வெளிவரும் முன் டி.வியில் திரையில் வராத நடிகர் அல்லாத நிறைய கலைஞர்களை அறிமுக படுத்தினார். அந்த கலைஞர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோசம். மற்ற கலைஞர்களை ஊக்குவிக்க, மதிக்க தெரிந்த ஒரு சிறந்த கலைஞர் கமல்.

 
At 3:32 PM, Blogger சிவா said...

வாங்க மோகன்ராஜ் (கைப்புள்ள). உங்க ப்ளாக் பக்கம் போய் பார்த்தேன். வண்டி பாரம் தாங்காம ஒர் கழுத/குதிர மல்லாக்க கெடந்தது :-)). சரி ரொம்ப வேலை ஆகி போச்சுன்னு புரிஞ்சிக்கிட்டேன். இப்போ 3 D படம் போட்டிருக்கீங்க போல..வந்து பார்க்கணும்.

ஆமாம் கைப்புள்ள. 'மாடவிளக்கே' பாடல் இன்று கேட்டாலும் அப்படியே அலுக்காம கேட்க புடிக்கும். எனக்கும் ரொம்ப புடிச்சப்பாட்டு அது. சீக்கிரம் இன்றைய பாடலில் போட்டுடலாம்.

 
At 3:35 PM, Blogger சிவா said...

வாங்க பொன்ஸ். உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
//பாட்டு கேட்க முடியாட்டாலும் உங்க விளக்கம் அருமை// பாராட்டுக்கு நன்றி நண்பரே.
இன்னும் நீங்க நிறைய பாடல் கேட்டதில்லை போல. சீக்கிரம் ரியல் ப்ளேயர் இறக்கி கேட்டு சொல்லுங்க.
'புதுப்பேட்டை'ல கமல் பாடல் ரொம்ப நல்லா இருக்கு. நீங்க சொல்ற மாதிரி படத்தில் எப்படி பண்ணி இருக்கிறார்கள் என்று பார்க்கணும்.இன்னும் படம் வருகிற வழிய காணோமே..

 
At 7:39 PM, Blogger சிவா said...

சாணக்கியன்!
//வரவேற்பையும் அவங்க கொடுக்கிற விட்டுப்போன பாடல்கள் பட்டியலையும் பார்க்கும்போது பாகம்-2 போடனும் போல இருக்கே// போட்டுட்டா போச்சு :-). எல்லாம் உங்க யோசனை தான் :-)

 
At 8:14 PM, Blogger ஜோ/Joe said...

கமல் ஒரு அற்புதக்கலைஞன்!

கமல் பாடிய பாடல்கள் இன்னும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்

1.சொன்னபடி கேளு - சிங்கார வேலன்
2.ராஜா கைய வச்சா -அ.சகோதரர்கள்
3.தென் பாண்டி சீமையிலே -நாயகன்
4.பேய்கள நம்பாத -மகாநதி
5.எங்கேயொ(?)- சோகப்பாடல் -மகாநதி
6.அம்மம்மா வந்ததிங்கு -பேர் சொல்லும் பிள்ளை
7.கண்மணி -குணா
8.முத்தே முத்தம்மா -உல்லாசம்
9.ஆள்வார் பேட்டை -வசூல்ராஜா
10.ராமசாமி -பம்மல் கே சம்பந்தம்

 
At 8:50 PM, Blogger கைப்புள்ள said...

//பாராட்டுக்கு நன்றி நண்பரே//

பொன்ஸ்! சிவாவும் உங்களை ஐயான்னு நெனச்சிட்டாரு போலிருக்கு.
:))-

 
At 8:52 PM, Blogger கைப்புள்ள said...

//ஆமாம் கைப்புள்ள. 'மாடவிளக்கே' பாடல் இன்று கேட்டாலும் அப்படியே அலுக்காம கேட்க புடிக்கும். எனக்கும் ரொம்ப புடிச்சப்பாட்டு அது. சீக்கிரம் இன்றைய பாடலில் போட்டுடலாம்.//

பாடல் வரிகளும் இயல்பா ஆழமா இருக்கும். போடுங்க...கேப்போம்.
:)

 
At 4:11 AM, Blogger சிவா said...

வாங்க ஜோ! நீங்க கொடுத்த பட்டியலில் நிறைய நல்ல பாடல்கள் இருக்கிறது. குணா, எங்கேயோ (மகாநதி). கமல் பாடல்களில் உல்லாசம் படப்பாடல் மாதிரி வேறு நடிகர்களுக்காக பாடிய பாடல் சில இருக்கிறது. உல்லாசம் பாடலை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

 
At 4:11 AM, Blogger சிவா said...

வாங்க நம்பி! தேவர் மகன் பாடலை சொல்றீங்களா..ஆமாம்..மறக்க மனம் கூடுதில்லையே :-))

 
At 4:13 AM, Blogger சிவா said...

என்ன கைப்புள்ள! பொன்ஸ் அம்மாவா..ஐயான்னு தான் நெனைச்சுட்டேன் :-)). இப்போ தான் அவங்க ப்ளாக் போய் பாத்தேன்..

மாடவிளக்கே சீக்கிரம் போட்டுடலாம்.

 
At 10:23 AM, Anonymous Anonymous said...

Ninaivo oru paravai.......Marvelous miracle by Early Ilayaraja!! I can’t get enough of the humming - What a sensational lure in a relaxed sugam! Kamal’s grainy, rough voice with Janaki’s sexy charm complete the EROTIC song!! Let me indulge in the pleasure....... love, vinatha!

 
At 7:18 PM, Blogger சிவா said...

வினதா அக்கா! வாங்க. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க. கமல் பாடல் கேட்டீங்களா..
/Marvelous miracle by Early Ilayaraja/ அதே அதே :-)

 
At 9:23 PM, Blogger Sud Gopal said...

//அதிலும் டக்கென்று பிடிக்கும் 'பூ பூத்தது' பாடலை படத்தில் கொத்து பரோட்டாவில் மாட்டின முட்டை மாதிரி கொத்தி இருப்பார் கமல்.//

அந்தப் பாடலைப் பாடினது கமல் இல்லைன்னு நினைக்கிறேன்.இளையராஜாவின் சமீபத்திய ஃபேவரட்டான ஷ்ரேயா கோசலும்,சோனு நிகாமும் தான்.

விருமாண்டியில "கொம்புல பூவைச் சுத்தி" அப்படீங்கற பாட்டும் ரொம்ப நல்லா இருக்கும்.அந்தப் பாடலின் ஆரம்பித்திலும் இடையில் வரும் ட்ரம்பெட்டும்,கோரஸான மழலைகளின் குரலும் அந்தப் பாடலுக்கு ஒரு தனி ரிச்னெஸ்ஸைத் தந்திருக்கும்.

கமல் பாடிய டூயட் பாடல்களில் பெண் குரல் பெரும்பாலும் ஜானகி அவர்களது தான்."இஞ்சி இடுப்பழகா","சுந்தரி நீயும்","கண்மணி" என்று சங்கிலித்தொடராய் நீளும் அவர்களது குரலில் வந்த பாடல்கள்.
ஆனால் சமீப காலங்களில் அவர் டூயட் பாடுவதையும் நிறுத்தி விட்டார் போலும்.

மற்றபடி,ரொம்ப காலமாகவே உங்கள் பதிவுகளைப் படித்து வந்த போதும் சோம்பேறித்தனம் காரணமாய் இதுவரை பின்னூட்டியதில்லை.

தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.

 
At 2:56 AM, Anonymous Anonymous said...

A very good collection...awaiting eagerly for the next set of classics :-))

ksr.

 
At 3:46 AM, Anonymous Anonymous said...

I would like to tell about a song... This is from film "Anandha Ragam" and is the only duet i've heard till date in the voice of KJJ and IR. Song - "kadaloram kadaloram..".

This song can be categorised under "thenmangu padalgal" list of IR. Both IR and KJJ will sound energetic in their voice.Thus giving an unusual effect to the whole song.

...Nothing great can be found in this song except for the combination of two legends.

Hear to it...And...if you prefer... upload this in your blog.

Thanks.
ksr.

 
At 4:00 AM, Blogger சிவா said...

வாங்க வீகே! 'புரட்சி தலைவர்' பாட்டு போட்டுட்டு காணாம போய்ட்டீங்க. எப்போ அடுத்த பதிவு வருது?
'பொன் மானை தேடுதே' எனக்கும் புடித்த பாடல் தான். வருகைக்கு நன்றி.

 
At 4:08 AM, Blogger சிவா said...

சுதர்சன்,

//அந்தப் பாடலைப் பாடினது கமல் இல்லைன்னு நினைக்கிறேன்.இளையராஜாவின் சமீபத்திய ஃபேவரட்டான ஷ்ரேயா கோசலும்,சோனு நிகாமும் தான்.// நீங்க சொல்வது முற்றிலும் சரி. நான் கூற வந்தது, படமாக்கிய விதத்தை கூறினேன். கமல் பாடல் போடும் போது, கமல் படம் எடுத்ததை பற்றி கூறினால் குழப்பம் தான். சோனு நிகமும் உங்க பேவரைட்டா..வெரி குட். சமீபத்தில் ராஜா இசையில் மேலும் சில பாடல்கள் பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

//விருமாண்டியில "கொம்புல பூவைச் சுத்தி" அப்படீங்கற பாட்டும் ரொம்ப நல்லா இருக்கும்.அந்தப் பாடலின் ஆரம்பித்திலும் இடையில் வரும் ட்ரம்பெட்டும்,கோரஸான மழலைகளின் குரலும் அந்தப் பாடலுக்கு ஒரு தனி ரிச்னெஸ்ஸைத் தந்திருக்கும்.//

சரியா சொன்னீங்க. அந்த மாதிரி ரொம்ப நேசுரலான இசையை ராஜா ரொம்ப நாளைக்கு அப்புறம் கொடுத்தார். ட்ரம்பெட் சூப்பரா இருக்கும்.

//கமல் பாடிய டூயட் பாடல்களில் பெண் குரல் பெரும்பாலும் ஜானகி அவர்களது தான்."இஞ்சி இடுப்பழகா","சுந்தரி நீயும்","கண்மணி" என்று சங்கிலித்தொடராய் நீளும் அவர்களது குரலில் வந்த பாடல்கள். ஆனால் சமீப காலங்களில் அவர் டூயட் பாடுவதையும் நிறுத்தி விட்டார் போலும்.//

ஆமாம். நினைவோ ஒரு பறவை கூட ஜானகி தான். காரணத்தை ராஜாவை தான் கேட்கணும் :-)
சமீபத்தில் அவர் பாடுவது குறைவு தானே..'விருமாண்டில' 'ஒன்ன விட' டூயட் தானே..கமல் அவர் பேனரில் இன்னொரு படம் எடுத்தால் நிச்சயம் நிறைய நல்ல பாடல்கள் கிடைக்கும். பார்க்கலாம்.

//மற்றபடி,ரொம்ப காலமாகவே உங்கள் பதிவுகளைப் படித்து வந்த போதும் சோம்பேறித்தனம் காரணமாய் இதுவரை பின்னூட்டியதில்லை. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள். //

பாராட்டுக்கு ரொம்ப நன்றி சுதர்சன். உங்களை வெளி காட்டிக்கொண்டதுக்கு ரொம்ப நன்றி. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா வந்து பாருங்க.

 
At 4:21 AM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

எந்த இசை ரசிகனுக்கும் இவர்களின் கூட்டனி பிடிக்காமல் போகாது.. பாடல்களும் சிறப்பாக கேட்க முடிந்தது..
ஆமா.. சிவா.. இது என்ன ப்ளேயர்.. எப்படி பயன்படுத்துவது?
நானும் கூட சில பாடல்களை வைத்துக்கொண்டு பதிவு போட ஆசையாக உள்ளேன்..
விளக்கவும்..
நன்றி

 
At 4:22 AM, Blogger சிவா said...

வாங்க ksr,

/A very good collection./ நன்றி.

//This song can be categorised under "thenmangu padalgal" list of IR. Both IR and KJJ will sound energetic in their voice.Thus giving an unusual effect to the whole song.

...Nothing great can be found in this song except for the combination of two legends.
//
'கடலோரம் கடலோரம்' பாடல் பற்றி கீதா ஒரு பதிவு போட்டு இருந்தாங்க.
இங்கே தேடி பாருங்க.

http://kirukkals.com/wp/

நானும் ஒரு நாள் 'இன்றைய பாடலில் போட்டு விடுகிறேன்.
தங்கள் வருகைக்கு நன்றி.

 
At 8:29 AM, Anonymous Anonymous said...

Kadaloram Kadaloram..... IS THE TEXT BOOK to learn grammar of 'themmangu paadal'!! Specialty of Raaja’s high/low pitch singing with varied intensity is the very essence of Themmangu!! Vinatha.

 
At 5:39 PM, Blogger சிவா said...

பாலபாரதி! உங்களுக்கு பாடல் கேட்க முடிகிறதா. நல்லது. நீங்க சொல்றது உண்மை. கமல்-ராஜா கூட்டணி பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் :-)
பாடலை பதிவில் ஏற்றுவது பற்றி தனி மடல் அனுப்புகிறேன்.

வினதா அக்கா. அடிக்கடி உங்களை இந்த பக்கம் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோசம். 'கடலோரம் கடலோரம்' பாடல் கிடைத்தால் சீக்கிரம் பதிவு போடுகிறேன்.

 

Post a Comment

<< Home