விடை பெறுகிறேன்.
நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை.
ரொம்ப நாளைக்கு முன்னாடி என் குரு (அப்படி தான் சொல்வதுண்டு :-) CSR எங்கள் இளையராஜா யாஹு குழுமத்தில் இசை பற்றி சில பாடம் நடத்தினார். என் மண்டையில் ஒன்றும் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். ரொம்ப ஆர்வம் முத்தி போய் மட மடன்னு கடைக்கு ஓடிப்போய் ஒரு யமஹா கீ-போர்ட தூக்கிட்டு வந்து ( Yamaha PSR-275) ஒரு மூனு மாசம் தட்டு தட்டுன்னு தட்டிக்கிட்டு இருந்தேன். (ஒன்னும் தேறலைன்னாலும் ஒரு ஆசை..ஒரு முயற்சி தானே :-)) இப்போ ஒரு வருடமா அந்த கீ-போர்ட் அப்படியே கெடக்குது. சரி அதை மறுபடி எடுத்து கொடுமை படுத்தலாம் என்று ஒரு ஆசை..
அப்புறம் CSR இப்போ மறுபடி ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு Westen Classical Music பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டார். சரி! போன தடவை தேறாம போய்ட்டாலும் மறுபடி படிச்சு பார்க்கலாமே என்று இன்னொரு ஆசை...
எதுக்கும் சம்பந்தம் இல்லாம ஒன்னு. ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கலாம்னு தேடினப்போ இந்த கேமிரா கையில் மாட்டியது. SONY DSC-H2. அப்படியே இனையத்தில் தேடிய போது இந்த கேமராவில் எடுக்கப் பட்ட சில படங்கள் கிடைத்தது. மனசுக்குள் இன்னொரு ஆசை வந்துடுச்சு. நாமும் கொஞ்சம் Photography கத்துக்க முயற்சி பண்ணலாமா என்று. அதையும் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா..
இப்படி நிறைய பேராசைகள். இதுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் தேவை படுகிறது. அதான் கொஞ்ச நாள் இந்த ப்ளாக் வேலைகளில் இருந்து தள்ளி இருக்கலாம் என்று முடிவு செய்தேன்.( போடே..ரொம்ப தான் பில்ட் அப்பு...ஹி ஹி ஹி :-)).
அதுக்கு முன்னாடி உங்களிடம் சில வார்த்தைகள்.
ராஜா என்றால் எனக்கு ரொம்பவே கிறுக்கு. அவர் போட்டோவை வெட்டி ஒட்டி சந்தோச படுவதில் இருந்து, தியேட்டரில் அவர் பெயர் போடும் போது விசில் அடித்து சந்தோச படும் அளவுக்கு ரசிக்கும் ஒரு சராசரி ரசிகன். பாட்டுன்னா ராஜா இசை அமைக்கிறார். ரெண்டு பேர் பாடறாங்க. இதுக்கு மேல இசை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இப்படி சரக்கே இல்லாம, பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கும் ஆசை ஏன் வந்தது?
பொதுவாகவே என் ராசியோ என்னவோ என் நட்பு வட்டத்துக்குள் இசையை பற்றியோ, ராஜாவை பற்றியோ, ஒரு சராசரி பாடலை பற்றி கூட ஆர்வத்துடன் பேச நண்பர்கள் கிடையாது. அப்போது கிடைத்தது தான் இந்த ப்ளாக். சரி என்று ஆர்வ கோளாறில் ஆரம்பிச்சு 8 மாசம் ஓட்டியாச்சு. எனக்கு மனசுல என்ன தோனிச்சோ, ராஜா பற்றி, இசை பற்றி பேச ஒரு நண்பன் கிடைத்தால் என்ன பேசுவேனோ, அத்தனையையும் உளறி கொட்டியாச்சு.
எனது நண்பர்களாக, இது வரை அனைத்து பதிவையும் ஆர்வமுடன் கேட்டு என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் கோடி நன்றிகள். ரொம்பவே சந்தோசமா திருப்தியா என் ஆசையை நிறைவேற்றியது நீங்கள் தான். உங்களுக்கு நேரம் இருந்தால், ஏதாவது சொல்லணும்னா gsivaraja@gmail.com க்கு மடல் அனுப்புங்க. சந்தோசமா பதில் அனுப்புகிறேன்.
இதுவரை எத்தனை நண்பர்கள். தவறாமல் எனக்கு ஊக்கம் கொடுத்த நண்பர்கள் ஏராளம். நன்றி நண்பர்களே. நிறைய பேருக்கு கமெண்ட் கொடுக்க நேரம் இருப்பதில்லை. 'நான் உங்கள் ப்ளாக்கை தவறாம படிப்பேன். இப்போது தான் கமெண்ட் கொடுக்கிறேன்' என்று நிறைய நண்பர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களுக்கும், படித்து விட்டு, பாடலை கேட்டு விட்டு இது வரை கமெண்ட் கொடுக்க நேரம் இல்லாமல் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா திரும்பி வருவேன். அப்பாடான்னு சொல்லிட்டு போய்றாதிய..என்ன :-)
என்றும் அன்புடன்,
சிவா.
-----
CSR ( CSRamasami) எங்கள் யாஹு குழுமத்தில் ஒரு மூத்த உறுப்பினர். தன் நேரத்தை எல்லாம் செலவிட்டு எங்களுக்கு ஒரு மூன்று மாதம் இசை வகுப்புகள் எடுத்தார். இப்போது அந்த சேவையை ப்ளாக் மூலமாக செய்து வருகிறார். இங்கே சென்று பாருங்களேன்.
இளையராஜாவுக்கு தனியாக கடிதம் போட்டு ஒவ்வொரு பாடலையும் பற்றி இசை விமர்சனம் கொடுத்து, ராஜாவும் மூன்று பக்கம் பதில் விளக்கம் கொடுத்து கடிதம் எழுதுவார். 'நான் இன்று டெல்லி செல்கிறேன். 3 நாளில் வந்து விடுவேன்' என்று கடிதத்தில் ராஜா கூறி செல்லும் அளவுக்கு அவரிடம் கடித தொடர்பில் இருந்த ஒரு ரசிகர் தான் CSR. ஆச்சரியமா இருக்கு இல்லையா. இங்கே போய் படிச்சி பாருங்க.
சரி..வரட்டாடே...
36 Comments:
Hi Siva,
I use to hear your 'indraiya padal' as the first duty in office at the morning :-)
All the best for your new hobbies...
Cheers
Chanakyan
சிவா ,
The secret of good photos is the person behind the camera and not the
camera itself என்று சொல்வார்கள்.
உங்கள் புது முயற்சிகள் இனிய அனுபவமாய்
அமைய வாழ்த்துக்கள்.
Hello Siva,
Daily un blog ai thedi odi vandha madhiri innikkum vandhappo semathiyana shock ! Paarthaa namba thalai uruludhu ! Ippadi ennai Villain aakitayeppa !
adhu kidakkattum ! Aanaal oru nalla blog ippadi ninnu pogalaamaa ? Paatu enga venumnaalum kettukkalam, ippadi comment oda paatu kidaikumaa ?
Ellorum vandhu Siva vai tin katta poraanga! (Vaanga Vaanga !)
சாணக்கியன்! நிங்க நம்ம ப்ளாக்கோட ரெகுலர் ரசிகர் ஆச்சே :-).
உங்கள் ஆசிகளுக்கு நன்றி. எல்லாத்தையும் முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன் என்ன :-)). எப்படியும் நாம இ-மெயில் தொடர்பில் இருப்போம்.
அன்புடன்,
சிவா
கார்த்திக்வேலு!
//The secret of good photos is the person behind the camera and not the camera itself என்று சொல்வார்கள். //
அப்படியா...நல்லா இருக்கே..முயற்சி செய்து பார்ப்போம் என்ன :-). டிஜிட்டல் கேமரா தானே..சுட்டு தள்ள வேண்டியது தான் :-)).
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்.
CSR!
Paarthaa namba thalai uruludhu ! Ippadi ennai Villain aakitayeppa ! //
ஹா ஹா ஹா :-)). உங்க தலையை மொத்தமா உருட்டலை குருவே :-)). பாருங்க..நானும் அந்த பக்கம் வந்து பார்க்கறேன்னு சொல்லிட்டு வரமுடியறதே இல்லை..அதனால தான் ப்ளாக்க நிறுத்திட்டேன் என்று பொய் எல்லாம் சொல்ல மாட்டேன் :-)). கொஞ்சம் நேரம் வேண்டியது இருந்தது. அதான்.
அதோட உருப்படியா உங்க ப்ளாக்கையும் படிக்கலாம்னு ஒரு ஆசை..அவ்வளவே :-)
//enga venumnaalum kettukkalam, ippadi comment oda paatu kidaikumaa ? //
நன்றி CSR. உங்களுக்கு நம்ம ப்ளாக் இவ்வளவு புடிச்சதை பார்க்கும் போது மனசுக்கு சந்தோசமா இருக்கு. அக்காவுக்கு போன் பண்ணி சொன்னீங்களாமே..மடல் அனுப்பி இருந்தாங்க. இப்படி நீங்க நம்ம ப்ளாக்க ரசிப்பதை கேட்க என் சந்தோசத்துக்கு அளவே இல்லை..
உங்கள் பதிகளை, பாடல்களை தொடர்ந்து படித்துக் கேட்டு மகிழ்ந்தவன் என்ற முறையில், உங்களின் இந்தத் தாற்காலிகப் பிரிவு, வருத்தத்தை அளித்தாலும், உங்கள் முயற்சி வெற்றியடைய இந்த [தெரிந்த!!] நண்பனின் வாழ்த்துகள், IIRP!!
அண்ணாச்சி,
கேமராவ வாங்கிட்டீயளா? இன்னும் வாங்கலைனா, Nikon D 50-ஐயும் கொஞ்சம் பாருங்க.
Hello Babble!
I searched some of the high zoom category. Browsed thru some review on Canon S2/S3, Sony H1/H2 and Pana FZ5/FZ7... Finally fixed my mind SONY H2 for its picture quality. I want to buy a dSLR only.. But budget கொஞ்சம் இடிக்குது. :-)). Nikon D50 seems to be a dSLR around $400..Hmmm...Will think about that also..
Any suggestion where to buy this camera?
அன்புடன்,
சிவா
சிவா,
அதான் கேமரா வாங்கறீங்க இல்ல!? புடிக்கற படங்களையாவது அடிக்கடி போடுங்க! :)
கடைசீல எனக்கு அல்வாதானா...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நீங்க என்னய இப்பிடி ஏமாத்தி மோசம் பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலையே!!!!!!!!!!!!!!!!!!!!
அப்பாடா....
:-)))))
சும்மாத் தான் சொன்னேன் சிவா. :-) நீங்க எங்கே போயிடப் போறீங்க? இங்க தான இருப்பீங்க?! கூடிய விரைவில உங்களைத் திருப்பிக் கூட்டிகிட்டு வந்துட மாட்டோம்? :-)
சிவா,
அதான் கேமரா வாங்கறீங்க இல்ல!? புடிக்கற படங்களையாவது அடிக்கடி போடுங்க! :)
என்னவே எங்களக் கண்டு இப்படி ஓடிதீய? சும்மா வந்து அப்பப்பம் ஒரு பதிவு போடும்வே.
Siva,
Enna idhu ipdi panniteenga? Hmm, we all will miss your comments very much. Ungal muyarchiyil vetriyadaya ennudaya vazhthukkal. Irundhalum, time kedaikkarappo ezhudunga.
Siva,
$400 is not very costly. Oru thadavai thane vaanga pooroom. Nan lam parunga, 5 weeks anga irunduttu vandadukku 250$ potu camera vangitu vandirukkeen....
DSLR nalla irukkumnu thonuchunna... yosikkama vangunga....
என்ன சிவா இது,
இப்போதான் விடுப்பு முடிஞ்சு வந்து நண்பர்கள் பதிவு ஒண்ணொண்ணா வாசிக்க ஆரம்பிச்சேன், அதுக்குள்ளே விடை பெறுகிறீர்களே! ஆனாலும் ப்ளாக் உங்களை விடாது. சீக்கிரமே ஓடி வருவீங்க பாருங்க
அப்போ இனிமேல் கோடம்பாக்கம் பக்கம் தான்;என்னுறீங்க!!!!! ரைரில் காட்டில் இளைய சிவாவின் இசையில் என்னு பார்க்கலாம் ,என்கிறீங்க!!!!! நடந்தாலும் ஆச்சரியமில்லை.
முயற்ச்சி திருவினை யாக்கும்!!!!!
வாழ்த்துக்கள்!!!
யோகன் பாரிஸ்
we'll miss u..
seekiram marupadi vaanga
சிவா,
நல்ல அருமையான பாடல்களை உங்கள் பிளாக் மூலம் ரசித்துக்கொண்டிருந்தோம். திடீரென "விடை பெறுகிறேன்" என சொல்றீங்க. கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் நீங்கள் music & photography கற்றுக் கொள்வதால் சந்தோஷமே. கற்று முடித்துவிட்டு மீண்டும் பல நல்ல பாடல்களை தொடர்ந்து தாருங்கள்!
சசிகலா
சங்கர் சார்.
நீங்க IIRPithan- என்று சொன்னவுடனே நம்ம ஆள் என்று தெரிஞ்சிட்டு. ஆனா நீங்க ப்ளாக்ல இருக்கிறது தெரியாது. அதான் உடனே கண்டுபுடிக்க முடியலை.
//இந்த [தெரிந்த!!] நண்பனின் வாழ்த்துகள், IIRP!!// நன்றி சார். இப்போ 'தெரிந்த' நண்பர் :-))
இளவஞ்சி & மதி,
//அதான் கேமரா வாங்கறீங்க இல்ல!? புடிக்கற படங்களையாவது அடிக்கடி போடுங்க! :)// படம் போடுற அளவுக்கு கத்துக்க இன்னும் நாள் இருக்குங்க..வெயிட்..வெயிட் :-)
ராகவன்! //கடைசீல எனக்கு அல்வாதானா...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ நீங்க என்னய இப்பிடி ஏமாத்தி மோசம் பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலையே!!!!!!!!!!!!!!!!!!!!
// ஹா ஹா..அழாதிய வே..இங்கே தான் இருக்கறேன்..நம்ம வருகை உங்க ப்ளாக்குக்கு எப்பவும் உண்டு. எனக்கு ரொம்ப புடிச்ச ப்ளாக் ஆச்சே :-)).
சரி! பாட்டு ப்ளாக் ஆரம்பிக்கறேன்னு சொல்லி இப்படி இழுத்துக்கிட்டே போறீயலே ( ஆமாம். இளையராஜாவின் இசையில் முருகன் பாடல்கள் தான் முதல் பதிவு..சொல்லிப்புட்டேன். (நான் உங்கள ஏமாத்தினதுக்கு மன்னிச்சுக்கோங்க ராகவன் :-)
நன்றி குமரன்
கொத்தனாரே!
//என்னவே எங்களக் கண்டு இப்படி ஓடிதீய? சும்மா வந்து அப்பப்பம் ஒரு பதிவு போடும்வே.// ஹாஹா..ஓட தான் செய்யணும் போல.. வந்திடறேன்வே
வினதா அக்கா! உங்க FAREWELL-க்கு ரொம்ப நன்றி அக்கா. இன்னைக்கு நீங்க கொடுத்திருக்கிற பாட்டெல்லாம் கேட்டுட்டு இன்னொரு கமெண்ட் கொடுக்கறேன்.
உங்கள் தொடர் ஆதரவுக்கும், கொடுத்த உற்சாகத்துக்கும் ரொம்ப நன்றி அக்கா.
அன்பு தம்பி,
சிவா
வெங்கட் (CRV)
//we all will miss your comments very much. Ungal muyarchiyil vetriyadaya ennudaya vazhthukkal. Irundhalum, time kedaikkarappo ezhudunga.// கொஞ்ச நாள் வேற வேலை பாக்கலாம்னு தான்..சீக்கிரம் திரும்பி வந்தாலும் வரலாம் :-). உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி வெங்கட். இனி என்னை அடிக்கடி அந்த பக்கம் பார்க்கலாம் :-)
தாணு அக்கா! ஓ! நீங்க லீவுல இருந்தீங்களா... :-)
//ஆனாலும் ப்ளாக் உங்களை விடாது. சீக்கிரமே ஓடி வருவீங்க பாருங்க// வர்றேன்..வர்றேன் :-))
//முயற்ச்சி திருவினை யாக்கும்!!!!!
வாழ்த்துக்கள்!!!
யோகன் பாரிஸ்//
நன்றி யோகன்.ரொம்ப புகழாதீங்க..ஹி..ஹி :-)
//we'll miss u... seekiram marupadi vaanga// நன்றி ராசா :-). சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
சிவா
சசிகலா! நீங்க தான் நம்ம ப்ளாக்குக்கு புதிதாக வந்த வாசகி. நானும் நினைத்து பார்த்தேன்..நல்லா உற்சாகம் கொடுத்தாங்களே என்று. ரொம்ப நன்றி சசிகலா. முடிந்தால் மடல் அனுப்புங்கள்.
///நல்ல அருமையான பாடல்களை உங்கள் பிளாக் மூலம் ரசித்துக்கொண்டிருந்தோம். திடீரென "விடை பெறுகிறேன்" என சொல்றீங்க. கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் நீங்கள் music & photography கற்றுக் கொள்வதால் சந்தோஷமே. கற்று முடித்துவிட்டு மீண்டும் பல நல்ல பாடல்களை தொடர்ந்து தாருங்கள்!
// கண்டிப்பா நல்ல பாடல்களை கேட்கலாம். :-)
அன்புடன்
சிவா
Dear Siva,
Ungal pudhiya muyarchigaluku ennudaiya vaazhthukkal !!!
Analum,. IR in isai nammai vittu piriyadhu Siva !!! Adhanal, nichayam ungaluku time kedaikum podhu neenga nichayam blog ku vandhu IR songs host pannuveenga enra nambikaiyudan.....
Usha Akka.
சிவா, உங்க எல்லா புது முயற்சிகளும் திருவினையாக வாழ்த்துகள்.
சீக்கிரமா திரும்பி வந்துருங்க...
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
சிவா அண்ணே நான் தொடர்ந்து உங்க பதிவுக்கு வந்து பாடல்களை ரசித்துக் கொண்டு இருந்தேன். நீங்க விடை பெறுகிறேன்ங்கிரது வருத்தமா இருக்கு :(
இது தற்காலிகம்தான?
Post a Comment
<< Home