கீதம்...சங்கீதம்

எனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, June 06, 2006

பாடாய் படுத்தும் காதல் (கட்டம்-4)

கட்டம் 4. காதலை சொல்லி அங்கேயும் கிரீன் சிக்னல் கெடைச்சா நேரே டூயட்டு தான். அந்த கட்டத்தை அப்படியே விட்டுடலாம் (நம்ம ஊருல டூயட்டுக்கா பஞ்சம். படத்துல 3 பாட்டு டூயட் தான்). 90 களில் இயக்குனர் வாசு, கேயார் எல்லாம் கொடிகட்டி பறந்த போது பாதி படங்களில் இடைவேளை விடும் காட்சி ஒரே மாதிரி தான் இருக்கும். பையனும் பொண்ணும் முதலில் அடிச்சிக்குங்க, அப்புறம் காதல் மலர்ந்து வரும் வேளையில் 'ஏ! எங்கய்யா நாட்டாம, உங்க ஐயா பகையாளியாச்சே' அப்படின்னு யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிச்சு போட்டு, அப்படியே ரெண்டு பேரும் பிரிகிற மாதிரி ஒரு காட்சி அமைத்து 'இடை வேளை' அப்படின்னு போட்டுடுவாங்க.

அப்புறம் ஊருக்கு நடுவுல ஒரு கோட்டைய கட்டி ரெண்டு பக்கமும் அருவா கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கும். அப்புறம் இதுக ரெண்டும் சோகமா ரெண்டு பாட்டு பாடி, ரெண்டு கூட்டமும் மாத்தி மாத்தி வெட்டிக்கிட்டு, ரெண்டும் சேர்வதற்கும் நம்மள படுத்தி எடுத்திருவாங்க. அப்படி பிரிவு பாடல்கள் தான் இன்று. கட்டம்-4. பாடலுக்கு போகலாமா.


1. மணிரத்னம், பாரதிராஜா, பாசில் என்று ராஜாவின் கூட்டணியில் கலக்கிய நல்ல இயக்குனர்கள் தவிர சில மசாலா இயக்குனர்களும் ராஜாவை விட்டு விலகியதில்லை. அப்படி அருமையா கூட்டணி அமைந்த ஒன்று கேயார்-இளையராஜா. கல்லூரி காதல் கதைகள் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான். அதில் எங்க கிராமம் வரை வந்து கலக்கிய ஒரு படம் கேயாரின் இயக்கத்தில் 'ஈரமான ரோஜாவே'. கடைசியாக கேயாரின் இயக்கத்தில் ராஜாவின் இசையில் வந்த ஒரு அருமையான படம் (இசை மட்டும்) 'காதல் ரோஜாவே'. படம் ரொம்ப தாமதமாக வந்து நேரே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. 'இளவேனில் இது வைகாசி மாதம்' அழகான பாடல். காலேஜ் படிக்கும் போது கேசட் வாங்கி வைத்திருந்தேன். இப்போ காணாம போய்விட்டது :-(. சரி. இப்போ பாட்டுக்கு வர்றேன்.

'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு'. யேசுதாஸ்-ஜானகி குரலில், ராஜாவின் கலக்கல் இசை. யேசுதாஸ் பாடலை தொடங்கும் போது 'என் ஜீவன் பாடுது' பாடலோ என்று லேசாக சந்தேகம் வந்து செல்லும். பாடல் இங்கே.2. இப்போ எஸ்.பி.பி. சில படங்களுக்கு ராஜா ஏன் இந்த மாதிரி இசையை கொடுத்தார். அப்படி அந்த படத்தில் என்ன தான் இருந்தது? அப்புறம் படம் ஏன் காத்து மாதிரி வந்ததும் தெரியாம போனதும் தெரியாம போச்சு? இப்படி நிறைய கேள்விகளை எழுப்பும் ஒரு படம் 'இன்னிசை மழை' (பேரு சூப்பரா வச்சிருக்காங்க. நிஜமாகவே அத்தனையும் இன்னிசை மழை தான்). 'மங்கை நீ மாங்கனி' என்று ராஜாவின் அழகான பாடல் ஒன்று உண்டு. இங்கே கொடுக்கப் போவது 'வா வா கண்மணி..வாசல் தேடிவா'. ராஜாவின் ட்ரம்ஸ் பாடல்களில் இதுவும் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். அதுவும் பாடலின் முதல் ஒரு நிமிடம். அப்பாடா...இப்படி நமக்கு வாசிக்க தெரிஞ்சா எப்படி இருக்கும். போட்டு பின்னு பின்னுன்னு பின்னறாங்கப்பா. மீண்டும் ஜானகி. S.P.B -யும் ஜானகியும் பாடுவது நம் கண் முன்னாடியே அப்படியே காட்சி வந்து நிற்கும்.3. யேசுதாஸ், எஸ்.பி.பி...அடுத்தது..அதே..மனோ. மனோ என்றால் கூட பாடுவது சித்ராவாக தான் இருக்க வேண்டும் (எஸ்.பி.பி-ஜானகி கூட்டணி மாதிரியே ஒரு கூட்டணி கொண்டுவர நினைத்த ராஜா, மனோவுக்கு பெயர் வைக்கும் போது மனோச்சித்ரா என்றால் நன்றாக இருக்கிறது என்று மனோ என்று பெயர் சூட்டியதாக சொல்வார்கள்). 'பாண்டி துரை'. பிரபு-குஷ்பு ஜோடியில் வந்த படம். வழக்கமான ஒரே அச்சில் வார்த்த கொலுக்கட்டை. 'கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா' 'மல்லியே சின்ன முல்லையே' என்று இரு கலக்கல் பாடல்கள் உண்டு. நம்ம தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு அருமையான பாடல் 'என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே'. சித்ராவின் non-metalic குரல் கேட்கவே எவ்வளவு இதமாக இருக்கிறது. இதமான தபேலா. அழகான வரிகள். எனக்கு புடிக்கும். உங்களுக்கு.4. மீண்டும் யேசுதாஸ். கூட பாடும் சுவர்ணலதா குரலை கேட்கும் போது பாடுகிறாரா, இல்லை ஏதாவது வாத்தியம் வாசிக்கிறாரா என்று தோன்றும். அப்படி ஒரு வித்தியாசமான குரல். நடு ராத்திரி இந்த மாதிரி பாடலா போட்டுவிட்டு கேட்டுக்கிட்டு இருந்தா அந்த சொகமே தனி. 'இது நம்ம பூமி' படத்தில் இருந்து 'ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா'. பல்லவியில் ஒரு வேகத்தில் (மெதுவாக) செல்லும் பாடல் சரணத்தில் ஜிவ்வென்று ஒரு கட்டத்திற்கு தாவும் (ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ..விரல் ஆணையால்..ஹோ')..கேட்க ரொம்ப நல்லா இருக்கும்.5. மீண்டும் கேயார். இந்த பதிவில் கிட்டத்தட்ட எல்லாமே தபேலா பாடல்கள் தான். ஆனால் இந்த பாடல் ரொம்ப வித்தியாசமான கம்போசிங். ரொம்ப குறைவான இசை. ஓங்கி ஒலிக்கும் ஹம்மிங். நம்மை எங்கோ அழைத்து செல்வது நிச்சயம். சுவர்ணலதாவோடு இணைவது எஸ்.பி.பி. 'வனஜா கிரிஜா' படத்தில் இருந்து 'உன்னை எதிர்ப் பார்த்தேன்'. பாடல் முழுவதும் வரும் கோரஸ் அழகோ அழகு. எஸ்.பி.பி பேஸ் வாய்சில் பாடியிருப்பதையும் ரசிக்கலாம். எல்லாத்துக்கும் மேல ராஜாவின் இசையை ரசிக்க மறந்திடாதிங்க..பாட்ட கேட்கலாமா.6. மனோ-சித்ரா ஜோடி மறுபடியும். 'ராசையா' படத்தில் இருந்து 'ஒன்ன நெனைச்சி உருகும் வண்ணக் கிளி'. இந்த பாடல் படத்தில் இல்லை என்று நினைக்கிறேன். தொடக்கம் முதல் முடியும் வரை ஒரே சீராக செல்லும் தபேலா நன்றாக இருக்கும். மனோ-சித்ரா பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. பாடல் இதோ.7. இறுதியா யேசுதாஸ்-ஜானகி கூட்டணியோடு முடிச்சிக்கலாம். 'பெரியவீட்டுப் பண்ணக்காரன்' கார்த்திக்-கனகா நடித்த படம். சோக பாடல்களுக்கே உரிய உருக்கம் நம்மை பாடலுக்குள் இழுத்து செல்வது உண்மை.
இந்த பதிவில் எல்லா பாடல்களுமே ஒரே மாதிரி தோன்றும். சட்டுன்னு அவசரகதியில் கேட்காக, நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்னா ஓட விட்டு அமைதியா கேட்டு பாருங்க. ராஜா நம் மனசுக்குள் மயிலிறகை வைத்து லேசாக வருடி செல்வது நிஜம்.

10 Comments:

At 9:23 PM, Blogger G.Ragavan said...

காதல் சோகப் பாடல்களா?

இந்தப் பாட்டை எப்படியய்யா மறந்தீர்...

கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் உனது உயிர் உருகும் சத்தம்

இன்னொரு பாட்டு....குடகுமலைக் காட்டில் வரும் பாட்டுக் கேக்குதா.....இந்தப் படமும் பாட்டுகளும் போட்ட போடு...அடேங்கப்பா...

 
At 6:46 AM, Blogger சாணக்கியன் said...

Songs, 5 & 6 are new to me. Added to the songs listed by g.Ragavan, there is another one which I like a lot,sung by p.Suseela; un nenja thottu sollu - Rajadhi Raja.

How did u miss siva ;-) . Ok, expecting these in Indraiya patal :-)

 
At 9:12 AM, Blogger G.Ragavan said...

சாணக்கியன். சரியாச் சொன்னீங்க. "ஒன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு" பாட்டும் சூப்பரு.

 
At 9:17 AM, Blogger சிவா said...

'ஒன் நெஞ்சத்தொட்டு சொல்லு என் ராசா..என் மேல் ஆசை இல்லையா' இந்த கட்டத்தில் வருமா என்ன?. அது தனி பாடல். பிரிவு என்பதை விட ஏமாற்றம்/ஊடல் என்ற கட்டத்தில் தான் வரும். ரஜினியை ஒரே ஆள் என்று நினைத்து ராதாவும், நதியாவும் தான் ஏமாந்து விட்டதாக வரும் பாடல் தானே அது..என்ன நாஞ்சொல்றது :-)). இன்றைய பாடலில் கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன்.

 
At 7:12 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

கடைசியா நீங்க போடுற பாட்டை எல்லாம் கேட்க முடியுது என் கணினியில.. என்ன செட்டிங் மாத்தினேன்னு தெரியலை.. இந்த ஊர்ல கேட்குது:)

ஆறடிச் சுவரு தான், தென்றல் காற்றே ரெண்டும் நான் இந்த லிஸ்ட்ல எதிர்பார்த்தேன்.. வந்திருச்சு.. மிச்சமும் கேட்டுட்டு சொல்றேன்..

இப்போ பாட்டு கேட்கிறதுனால அடிக்கடி வந்து தொல்ல பண்ணுவேன்.. இப்போவே சொல்லிபுட்டேன்:)

 
At 8:27 PM, Blogger சிவா said...

சாணக்கியன். இன்றைய பாடல் கேட்டீங்களா..நம்ம 'நெஞ்சத்தொட்டு சொல்லு' பாட்டு போட்டாச்சு. அப்புறம் இன்னொரு விசயம். அது இரு பெண்குரல் பாடல். சுசிலாவும் சித்ராவும் பாடியது. (ராதாவும், நதியாவும் பாடுவது போல படத்தில் எடுக்க நினைத்திருப்பார்கள் போல
:-).

 
At 8:30 PM, Blogger சிவா said...

வாங்க பொன்ஸ்! பாட்டெல்லாம் கேட்க முடியுதா. சூப்பர். நீங்க எதிர்ப்பார்த்த பாட்ட போட்டுட்டேனா. ரொம்ப சந்தோசம். தாராளமா தொல்ல பண்ணுங்க. நான் கண்டிப்பா பாடல் கொடுக்கிறேன். எல்லோரும் சேர்ந்து பாட்டு கேட்டா சந்தோசம் தானே :-)

 
At 9:59 PM, Blogger G.Ragavan said...

பொன்ஸ்...அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. இந்தியா வந்ததும் ஒங்க ஆபீஸ் கம்ப்யூட்டர்ல ரியல் பிளேயர் இண்ஸ்டால் பண்ணுங்க..சரியாப் போகும்.

 
At 11:09 PM, Blogger சாணக்கியன் said...

Siva Thanks for giving 'en nenja thottu sollu' in indraiya padal. aahaa enna oru arputham...

oh adu pirivu illaiya. neenga soldradu saridan ! 'kathal sogam' appadingara podu pirivila nan nenachitten :-)

 
At 8:16 PM, Blogger சிவா said...

சாணக்கியன்! காதல் சோகம் என்று ஒரு கட்டம் போட்டிடலாமா...இந்த பதிவு வெறும் பிரிவு பாடல்களாக மட்டும் எடுத்தேன். எப்படியோ ஒரு நல்ல பாட்ட சொன்னீங்க..எல்லோரும் கேட்டாச்சு :-))

 

Post a Comment

<< Home